ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை இயக்கத்தில் மாற்றம்


ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 23 Jun 2023 7:54 PM GMT (Updated: 24 Jun 2023 10:34 AM GMT)

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில்

ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண்- 07355) தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்பட்டு வருகிறது, இந்த ெரயிலின் சேவை காலம் ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ெரயில் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

பகுதியாக ரத்து

இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ராமேஸ்வரம்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண் 07356) சேவை காலம் ஜூலை 2-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ெரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் வழியாக மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலம் வழியாக ெரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹூப்ளி-ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ெரயில்கள் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன, எனவே இந்த ெரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேற்கண்ட தகவல் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


Next Story