பிளாஸ்டிக் இல்லாத நகரமாக சிதம்பரத்தை மாற்ற வேண்டும்


பிளாஸ்டிக் இல்லாத நகரமாக சிதம்பரத்தை மாற்ற வேண்டும்
x

பிளாஸ்டிக் இல்லாத நகரமாக சிதம்பரத்தை மாற்ற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், கோட்டாட்சியர் ரவி, ஆணையாளர் அஜித்தா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் நகராட்சியை குப்பை இல்லாத நகரமாக மாற்ற வேண்டும், பொதுமக்கள் தங்களது வீட்டில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, உலர்ந்த குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் வலியுறுத்தியதை போல் மஞ்சப்பை திட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். சிதம்பரம் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். இதற்கு நகர மன்ற உறுப்பினர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சியில் பொறியாளர் மகாராஜன், தாசில்தார் ஹரிதாஸ், நகர மன்ற துணைத் தலைவர் முத்து, நகர மன்ற கொறடா ஜேம்ஸ். விஜயராகவன், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், வரி மேல் முறையிட்டு குழு உறுப்பினர் அப்பு. சந்திரசேகரன், நியமனக்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒப்பந்தக்குழு உறுப்பினர் சுதாகர், நகர மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், அறிவழகன், லதா, தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், தில்லை. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மன்ற உறுப்பினர் சி.க.ராஜன் நன்றி கூறினார். அதை தொடர்ந்து சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உழவர் சந்தையில் புதிதாக அமைய உள்ள புதிய மார்க்கெட்டு பகுதிகளையும், பெரியண்ணா குளத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story