ஏரியை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழா முடிந்ததும் அருகே உள்ள பிஞ்சி ஏரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழா முடிந்ததும் அருகே உள்ள பிஞ்சி ஏரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது ஏரி பகுதியில் ரூ.45 கோடி செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக முதல்-அமைச்சரிடம், அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
போலீஸ் பாதுகாப்பு
விழா நடைபெறும் பள்ளி பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நுழைவு பகுதியில் காய்கறிகளால் பிரமாண்டமான வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு வந்த அனைவரையும் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அரங்கம் வளாகத்திலும் ஆங்காங்கே தனிப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா முடிவு பெற்றதும் அந்த பகுதி முழுவதும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருந்து ஊர்ந்து சென்றது. இந்த விழாவையொட்டி சிறு, சிறு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.