பணி வழங்க கோரி குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


பணி வழங்க கோரி குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x

பணி வழங்க கோரி குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம்

சேலம்:

பணி வழங்க கோரி குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு அங்கிருந்த அதிகாரியிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதையடுத்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணி வழங்க வேண்டும்

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் 40 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் 15 சிறப்பு மையங்களில் 43 ஆசிரியைகளும், 2 ஆசிரியர்களும், 277 மாணவ, மாணவிகளுடன் இயங்கி வந்தன.

இந்த நிலையில் இங்கு படித்து வந்த மாணவர்களை முறையான பள்ளிகளில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களின் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் சத்துணவு துறையில் காலி பணியிடங்களுக்கு பணி அனுபவம், கல்வி தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும், அல்லது தமிழ்நாடு அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story