கிக் பாக்ஸிங் போட்டியில் சோளிங்கர் மாணவர்கள் வெற்றி


கிக் பாக்ஸிங் போட்டியில் சோளிங்கர் மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 8 Jun 2022 11:35 PM IST (Updated: 9 Jun 2022 11:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த கிக் பாக்ஸிங் போட்டியில் சோளிங்கர் மாணவர்கள் வெற்றி பெற்று கொல்கத்தாவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

தமிழக அளவில் கடந்தவாரம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஜாக் கிக்பாக்ஸிங் அகாடமி சார்பில் அக்டாமி செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த 41 கிக் பாக்ஸிங் மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்றனர். இவர்களில் 19 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 16 மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும், 6 மாணவர்கள் வெண்கல பதக்கமும் பெற்றனர்.மாநில அளவில் வெற்றி பெற்ற இவர்களில் 12 பேர் கொல்கத்தாவில் 20-ந் தேதி தொடங்கும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.


Next Story