காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கிற்கு வாய்ப்பு: கரையோர கிராம மக்கள் வெளியேற வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கிற்கு வாய்ப்பு:  கரையோர கிராம மக்கள் வெளியேற வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கிற்கு வாய்ப்பு: கரையோர கிராம மக்கள் வெளியேற வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

நாமக்கல்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கிற்கு வாய்ப்புள்ளதால் நாமக்கல் மாவட்ட கரையோர கிராம மக்கள் வெளியறே வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். இதன் காரணமாக தற்போது 25 ஆயிரம் கனஅடி நீரானது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

எனவே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

தண்டோரா

மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் உள்ளிட்ட எண்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமாரபாளையத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் பழைய பாலம் அண்ணா நகர், கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர் ஆகிய 3 இடங்களில் வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை செய்தனர்.


Next Story