காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:  கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதன் காரணமாக நேற்று இரவில் இருந்து மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் வசிக்க கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித காரியங்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செல்போன் எண்கள்

மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையத்திற்கு 1077 என்ற எண்ணிலும், காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் குமாரபாளையம் தாலுகாவில் உள்ளவர்கள் 9786984577 என்ற எண்ணிலும், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்தவர்கள் 9445000545 என்ற எண்ணிலும், பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ளவர்கள் 9445000546 என்ற எண்ணிலும், மோகனூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் 9952412755 என்ற எண்ணிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story