கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு


கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
x

ஐகோர்ட்டு உத்தரவின்படி கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்காலில் அண்ணா நுழைவு வாயில் அருகில் கிரிவலப்பாதை இணையும் பகுதியில் தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க தி.மு.க.வினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிரிவலப்பாதையில் மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் சிலையை நிறுவதற்காக பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு சிலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விவசாரணை நடத்திய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறையினர் ஆவணங்களையும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணையை 19-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்று கருணாநிதிக்கு சிலை அமைக்கும் இடத்தை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story