கேரளாவில் இருந்து 900 வாத்துக்களுடன் வந்தலாரியை திருப்பி அனுப்பினர்


கேரளாவில் இருந்து 900 வாத்துக்களுடன் வந்தலாரியை திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

கேரளாவில் இருந்து புளியரைக்கு லாரியில் கொண்டு வந்த 900 வாத்துக்களை கால்நடைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

தென்காசி

செங்கோட்டை:

கேரளாவில் இருந்து புளியரைக்கு லாரியில் கொண்டு வந்த 900 வாத்துக்களை கால்நடைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

பறவை காய்ச்சல்

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் இருந்து வருவதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கோழி, வாத்து, முட்டை, இறைச்சி போன்றவை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புளியரையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்பேரில், இந்த முகாமில் 24 மணி நேரமும் கால்நடை மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பகுதியில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குமாபட்டிக்கு செல்வதற்காக புளியரை வழியாக லாரி ஒன்று வந்தது.

திருப்பி அனுப்பினர்

அப்போது கால்நடை மண்டல இணை இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர்கள் ஜான்சுபாஷ், மகேஸ்வரி தலைமையில் கால்நடை ஆய்வாளர் பூமாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அனிதா ஆகியோர் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 900 வாத்துக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்பு லாரி டிரைவரை எச்சரித்து மீண்டும் வாத்துக்களுடன் லாரியை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.



Next Story