கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 7:35 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது.

கடலூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மையக்குழு கூட்டம் கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சுப்புராயன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கர்நாடகா மாநில துணை முதல்-மந்திாி டி.கே.சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்திருப்பதை வன்மையான கண்டிக்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை துணை முதல்-மந்திரி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. கர்நாடகாவில் ஏற்கனவே இருந்த பா.ஜ.க. அரசு மேகதாது அணை பிரச்சினையை புதிதாக எழுப்பி தமிழ்நாட்டிற்கு விரோதமான நிலையை மேற்கொண்டது. இதேநிலையை தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசும் மேற்கொண்டுள்ளது நேர்மையற்றது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புகளுக்கு விரோதமானது. ஆகவே கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் அணை கட்டும் முடிவை முற்றிலும் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story