போட்டி தூண்டில் மீன் திருவிழா
போட்டி தூண்டில் மீன் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சியில் உள்ள பொய்யாமணி கண்மாயில் போட்டி தூண்டில் மீன் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு போட்டி தூண்டில் மீன் திருவிழாவை தொடங்கி வைத்தனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற விழாவில் நத்தம், துவரங்குறிச்சி, சிங்கம்புணரி, பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 260-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கெண்டை, கட்லா உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்தனர். இதனை சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story