'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத தெருவிளக்குகள்

சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி, திருட்டு பயம் பொதுமக்களுக்கு உள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-வீரமணி, சீலப்பாடி.

சேதமடைந்த மின்கம்பம்

திண்டுக்கல்லை அடுத்த ஜம்புளியப்பட்டியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல்லில் பழனி பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் அமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடி, பன்றிமலைக்கு தலா ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த 2 பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் வத்தலக்குண்டு, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தாண்டிக்குடி, பன்றிமலைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பெரும்பாறை.

பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவையை தான் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கிராமங்களில் பி.எஸ்.என்.எல். சேவை முறையாக கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விவேக், கோட்டூர்.

மாற்றுத்திறனாளிகள் அவதி

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதற்கு செல்லும் சாய்தள பாதையை மறித்து குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாய்தள பாதையை சரிசெய்து, இந்த கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

-திருமுருகன், தேனி.

குண்டும், குழியுமான சாலை

உத்தமபாளையத்தில் உள்ள 4 ரதவீதிகளிலும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காதர் மீரான், உத்தமபாளையம்.

சேதமடையும் சுகாதார வளாகம்

சின்னமனூர் பொன்நகர் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

-ரமேஷ் சின்னமனூர்.

பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிட பணி

சின்னமனூர் நகராட்சி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் இலவச கழிப்பறை கட்டிடம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டி, சின்னமனூர்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story