புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை


நாய்கள் தொல்லை

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் இங்குள்ள மக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி 34-வது வார்டு பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சேகர், பாப்பா ஊரணி.

தண்ணீர் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சி சூரக்குளம் ரோட்டில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேஷ், காஞ்சிரங்கால்.

பஸ்கள் நின்று செல்லுமா?

சிவகங்கை மாவட்டம் கட்டக்காளைப்பட்டியில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள. தினமும் மாலை நேரத்தில் கல்லூரி முன் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு தாமதம் ஆகிறது. எனவே கல்லூரி முன் பஸ்களை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாணவர்கள், கட்டக்காளைப்பட்டி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜமீல், தேவகோட்டை.


Next Story