புழல் சிறையில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையம்


புழல் சிறையில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையம்
x

புழல் சிறையில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையத்தினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சென்னை

புழல் தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் விடுதலையாகி செல்லும்போது நல்ல பணியில் சேர்வதற்காகவும், புதிய வாழ்வு தொடங்குவதற்காகவும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கும் வகையில் புழல் சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

30 கணினிகளுடன் வெளியில் இருந்து கணினி பயிற்சியாளர்களை கொண்டு கைதிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் சிறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story