பைசுஅள்ளியில் தேசிய கருத்தரங்கம்


பைசுஅள்ளியில் தேசிய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளியில் பெரியார் பலக்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மைய இயற்பியல் துறை சார்பில் 'சமூக பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்' குறித்த அறிவியல் கல்வியாளர்களின் தேசிய அளவிலான கருத்தரங்கம் 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் தொடக்க உரையாற்றினார். சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக டீன் சேது குணசேகரன், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெய்சங்கர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். அனைவரையும் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வ பாண்டியன் வரவேற்றார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story