மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியதை கண்டித்தும், அரிசி, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர தலைவர் வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் குழு உறுப்பினரும், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் அக்ராவரம் கே.பாஸ்கர், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் நாகேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story