மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எளம்பலூர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, காங்கிரஸ் கட்சியினர் மீது மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்தும், அரிசி, பால் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களுக்கு புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதித்துள்ளதை கண்டித்தும், ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் வகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தாறுமாறாக உயர்த்தியதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவரான வழக்கறிஞர் அருண்பிரகாஷ், மாவட்ட செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு ரஞ்சித்குமார் மற்றும் வட்டாரத் தலைவர்கள், விவசாய பிரிவு, இளைஞர் காங்கிரஸ், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, ஊடக பிரிவு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பாரதிய ஜனதா அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story