தொடர் கனமழை: இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?


தொடர் கனமழை: இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?
x
தினத்தந்தி 2 Nov 2022 6:31 AM IST (Updated: 2 Nov 2022 7:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர் .


Next Story