வேலூரில் டாக்டருக்கு கொரோனா


வேலூரில் டாக்டருக்கு கொரோனா
x

வேலூரில் தனியார் மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம், நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 22-வது வார்டு சைதாப்பேட்டையை சேர்ந்த 26 வயதுடைய சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சளிமாதிரி பரிசோதனை மற்றும் அந்த பகுதியில் நோய் தடுப்புப்பணிகள் செய்யப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story