தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வேண்டும்

அழகியமண்டபத்தில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பள்ளம் எதுவென்று தெரியாமல் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ஆஷிக், திருவிதாங்கோடு.

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.வீரசூர பெருமாள், வண்ணான்விளை.

நாய்களால் விபத்து

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பூதப்பாண்டி வடக்குத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களாக அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீபரிஷீத், பூதப்பாண்டி.

சுகாதார சீர்கேடு

குளச்சலில் ஏ.ஆர்.எஸ். ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் பின்புறமுள்ள பகுதியை சிலர் இயற்கை உபாதையை போக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்லா, குளச்சல்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டு தட்டான்விளை மெயின் ரோட்டில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், வல்லன்குமாரன்விளை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தக்கலை மேட்டுக்கடையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள பாலத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு பள்ளம் ஏற்பட்டது. தற்போது அந்த பள்ளத்தில் தான் பாலம் பழுதடைந்துள்ளது என எச்சரிக்கை பலகை வைத்துள்னனர். ஆனால் இதுவரை பாலத்தை சீரமைக்கவில்லை. எனவே உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்்கை எடுப்பார்களா?

-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.


Next Story