தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் சில நேரங்களில் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த கோட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் நடவடிக்கை எடுத்து அதிவேகமாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், திருச்சி.

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல், அலர்மேல் அவென்யூ பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி.

மூடப்படாத பள்ளம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள முருங்கை ஊராட்சி மருதம்பட்டி முதல் கிடாரம் செல்லும் சாலையில் இருபுறமும் பைப்லைன் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளம் கடந்த 6 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் படுகாயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கிடாரம், திருச்சி.

தேனீக்கள் அகற்றப்படுமா?

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 13 மாடி குடியிருப்பில் தேனீக்கள் நிறைய கூடு கட்டி உள்ளது. மொத்தமாக கணக்கிட்டால் 6-ல் இருந்து 7 வரை பெரிய கூடாக கட்டியுள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தியாகராஜன், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், அதவத்தூர் கிழக்கு அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட சாந்தாபுரத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரகுநாத், அல்லித்துறை, திருச்சி.


Next Story