தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

நோயாளிகள் அவதி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு மேல்தளத்தில் இயங்கி வருகிறது. இதனால் அவரச சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அவரச சிகிச்சை பிரிவை கீழ் தளத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

மின்மோட்டரை சரிசெய்ய கோரிக்கை

அாியலூா் மாவட்டம், செந்துறை தாலுகா, பரணம் ஊராட்சி மேல தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள மின் மோட்டார் கடந்த 10 நாட்களாக பழுதாகி கிடக்கிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமிநாதன், பரணம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் இருந்து அல்லி நகரம் வரை வந்த பெரம்பலூர் - அரியலூர் சாலையில் தினமும் சிமெண்டு லோடு ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பேரளி.

கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குழவடையான் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள முன் பகுதியில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டி சுகாதார கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குழவடையான்.

மின்மோட்டார் சீரமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் கிராமத்தில் மூப்பனார் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெற்றியூர்.


Next Story