தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும் குழியுமான சாலை

நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே. சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-முகம்மது தவ்பீக், மேலப்பாளையம்.

ஒளிராத தெருவிளக்கு

முக்கூடல்- கடையம் சாலையில் அரிராம்நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-மணி, ரஸ்தாவூர்.

பராமரிப்பற்ற சுகாதார வளாகம்

கூடங்குளம் கிழக்கு பகுதி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சுகாதார வளாகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வசதி இல்லாததால் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வேகத்தடை தேவை

அம்பை மெயின் பஜாரில் சந்தை, பள்ளிக்கூடம், வங்கி, கோவில், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயம் போன்றவை உள்ளன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-உதயன், அம்பை.

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

நாங்குநேரி தாலுகா தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து கிருஷ்ணன்புதூரில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் உப்பு தண்ணீரையே மக்கள் குடிக்கின்றனர். இதனால் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-கார்த்திக் ராஜா, கிருஷ்ணன்புதூர்.

தெருவின் நடுவில் மின்கம்பம்

பாளையங்கோட்டை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து செல்வாநகரில் தெருவின் நடுவில் 2 இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே மின்கம்பங்களை தெருவின் ஓரத்தில் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராமசாமி, பாளையங்கோட்டை.

புகாருக்கு உடனடி தீர்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம், சித்த மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறுநீர் கழிப்பிடம் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாக மோகனசுந்தரம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சிறுநீர் கழிப்பிடம் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாநகராட்சி மச்சாது நகர், கங்காநகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்களை பதித்தனர். தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-காந்தி மள்ளர், தூத்துக்குடி.

சாலை, தெருவிளக்கு அவசியம்

காயல்பட்டினம் மெய்கண்ட சிவன் கோவிலுக்கு செல்லும் சாலை, தீவுத்தெரு தொடக்கப்பள்ளி முதல் அண்ணாநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சண்முகவேல், காயல்பட்டினம்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

கோவில்பட்டி நகராட்சி 10-வது வார்டு காந்தாரி அம்மன் கோவில் எதிரே உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பாலமுருகன், கோவில்பட்டி.

இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்குடை

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இரும்பாலான இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு கான்கிரீட் இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அன்றோ ஜெஸ்வந்த், சாத்தான்குளம்.

புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி 12-வது வார்டு மேலபட்டமுடையார்புரம் சங்கரநாராயணபுரம் வடக்கு தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பராமரிப்பற்று புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்க பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை பழுதுநீக்கி பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராஜேஷ், மேலபட்டமுடையார்புரம்.

சுடுகாட்டு பாதையில் இடையூறு

செங்கோட்டை தாலுகா தேன்பொத்தை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள மின்கம்பத்தின் தாங்கு கம்பியானது பாதையை மறித்து அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு வாகனத்தில் எடுத்து செல்ல முடியவில்லை. எனவே மின்கம்பத்தின் தாங்கு கம்பியை பாதையின் ஓரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-அய்யனார், தேன்பொத்தை.

பராமரிப்பற்ற சமுதாய நலக்கூடம்

கடையநல்லூர் தாலுகா பாம்புகோவில்சந்தை- பெரியசாமிபுரம் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடம் பல ஆண்டுகளாக பராமரிப்பற்று புதர் மண்டி கிடக்கிறது. அங்குள்ள கழிப்பறைகளிலும் கதவுகள் இ்ல்லாமல் திறந்தே கிடக்கிறது. எனவே சமுதாய நலக்கூடத்தை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-மதுசூதனன், பாம்புகோவில்சந்தை.

சேதமடைந்த சாலை

கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

* வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து சண்முகாபுரம் செல்லும் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-கணேசன், கீழக்கலங்கல்.


Next Story