தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள்.

கன்னியாகுமரி

மின்கம்பியில் படரும் கொடி

குலசேகரம்-திற்பரப்பு சாலையில் கான்வென்ட் சந்திப்பு அருகே ஒரு மின்கம்பத்தில் மின்கம்பியில் கொடிகள் படர்ந்த நிலையில் உள்ளன. இந்த கொடிகளால் காற்று வீசும் போது பல நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் கொடி வழியாக மின்சாரம் பாய்ந்து பேராபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மின்கம்பியில் படரும் கொடியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், குலசேகரம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

பறக்கை பாத்திமாநகரில் 4-வது தெருவில் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து ெசல்கிறது. அத்துடன் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முகமது இப்திகார், பாத்திமாநகர்.

சாலையோரம் தடுப்பு வேலி வேண்டும்

கன்னியாகுமரியில் இருந்து கரியமாணிக்கபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளமான பகுதிகளில் சாலையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கரியமாணிக்கபுரம் பகுதியில் சில இடங்களில் தடுப்பு வேலி அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த பகுதி மிகவும் பள்ளமாக உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.எஸ்.சித்தார்த்தன், வடக்குத்தாமரைகுளம்.

புதர்களை அகற்ற வேண்டும்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி திட்டுவிளை- விளாங்காடு சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் பள்ளி வளாகம் புதர்மண்டி காட்சியளிக்கிறது. அந்த புதர்கள் இடையே விஷ பிராணிகள் அடைக்கலம் புகுந்துள்ளன. எனவே, மாணவ-மாணவிகளின் நலன் கருதி புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எம்.முகமது ரபீக்,

திட்டுவிளை.

அங்கன்வாடி மையம் அமைக்கப்படுமா?

குளச்சல் நகராட்சியில் 17-வது வார்டு செட்டியார் தெருவில் கல்வித்துறைக்கு ெசாந்தமான இடத்தில் ஒரு கட்டிடம் இடிந்து பாழடைந்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் விஷ பிராணிகள் அடைக்கலம் புகுந்து வருகின்றன. எனவே, புதர்களையும் பழமையான கட்டிடத்தையும் அகற்றி விட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அபுதாஹீர், குளச்சல்.

சாலையில் தேங்கும் மழைநீர்

தேங்காப்பட்டணத்தில் இருந்து கருங்கல் ெசல்லும் சாலையில் தேங்காப்பட்டணம் சந்திப்பு அருகே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. அந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வடிந்து செல்லாமல் பல நாட்கள் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, ெபாதுமக்கள் நலன் கருதி சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பா.ஆல்பர்ட் ராஜ், கீழ்குளம்.


Next Story