'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

போதை ஆசாமிகள் தொல்லை

ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சி மைக்கேல்பட்டி கள்ளுக்கடை பிரிவு பகுதியில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி செய்து வம்பு இழுக்கின்றனர். இதனால் தேவையில்லாத சச்சரவுகள் வருகின்றன. பெண்கள் அச்சத்துடன் அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிமேகலை, மைக்கேல்பட்டி.

மின்கம்பங்களால் இடையூறு

சாணாா்பட்டியில் இருந்து கோணப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் வளைவான இடத்தில் மின்கம்பங்கள் நிற்பதால், வாகனங்கள் திரும்புவதற்கு இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். -காளிதாசன், கோணப்பட்டி.

தூய்மை பணி அவசியம்

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே குப்பைகள், காலி பாட்டில்கள் கிடக்கின்றன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் தூய்மையை இழந்து வருகிறது. எனவே குப்பைகள், காலி பாட்டில்களை அகற்றி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். -கதிரவன், தேனி.

சாலையில் அபாய பள்ளம்

திண்டுக்கல் சிறுமலைசெட் பகுதியில் இருந்து சந்தைரோடு வரை, நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டில் செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உருவாகிவிட்டன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்க நேரிடுகின்றனர். எனவே அபாய பள்ளங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -மகாலட்சுமி, திண்டுக்கல்.


Next Story