தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

மரம்வெட்டி அகற்றப்பட்டது

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளையில் சாலைேயாரம் ஒரு பட்ட மரம் நின்றது. அந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் அதை வெட்டி அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை வெட்டி அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாலை துண்டிப்பு

அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வயக்கத்தாழை அம்மன் கோவில் அருகே வன்னியோட்டுவிளை முதல் பரளியாறு செல்லும் சாலையில் ஒரு மாதம் முன்பு விரிசல் ஏற்பட்டது. தற்போது அந்த சாலை ெகாஞ்சம், கொஞ்சமாக இடிந்து விழுந்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக போக்குவரத்துக்கு மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ஜூன், மாத்தூர்.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை, பட்டாரியார் சாஸ்தா நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பட்டாரியர் சாஸ்தாநகர்.

வாகன ஓட்டிகள் அவதி

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகட்டிமாங்கோட்டில் இருந்து செருப்பங்கோடு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.முருகன், கட்டிமாங்கோடு.

சாலையை சீரமைக்க வேண்டும்

ராஜாக்கமங்கலம் தபால் நிலையம் அருகே சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதிகாடாக மாறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்கிறவர்களும், வாகனங்களில் செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரசன்னா, ராஜாக்கமங்கலம்.

ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு தேவை

குமரி மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் வழிபாட்டுத்தலங்களில் அதிகாலை நேரத்திலும், விழாக்காலங்களிலும் விதிமுறைகளை மீறி அதிக சத்தத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், முதியவர்கள், மாணவ-மாணவிகள், நோயாளிகள், சாலையில் பயணம் ெசய்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி விதிகளை மீறி அதிக சத்தத்தில் ஒலிப்பெருக்கள் பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டனி, நாகர்கோவில்.


Next Story