கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் சாவு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் சாவு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

முதியவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சின்னபர்கூரை சேர்ந்தவர் நாகாச்சாரி (வயது 90). இவர் கடந்த 11-ந் தேதி காலை அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் முதியவர் மீது மோதியது.

இந்த விபத்தில் நாகாச்சாரி சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொபட் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). பழையபேட்டையை சேர்ந்தவர் முகமது (32). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மொபட்டில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் ஆனந்த் நகரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேகத்தடை ஒன்றில் ஏறிய போது நிலைதடுமாறி ெமாபட் கவிழ்ந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த ஆறுமுகம் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். முகமது படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆவத்தவாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா (35). இவர் மலைசந்து பகுதியில் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடை ஒன்றில் பஸ் சென்றபோது கீதா நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கீதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 10-ந் தேதி மாலை இவர் பெல்லட்டி பக்கமாக மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அப்போது எதிரில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஜெயப்பிரகாஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயபிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story