கொளத்தூர் அருகேபன்றி காய்ச்சலுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் சாவுசுகாதாரத்துறையினர் விசாரணை


கொளத்தூர் அருகேபன்றி காய்ச்சலுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் சாவுசுகாதாரத்துறையினர் விசாரணை
x

கொளத்தூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் பலியானார். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.

சேலம்

மேட்டூர்

கொளத்தூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் பலியானார். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.

பன்றி காய்ச்சல்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 50), இவர் டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அய்யாவுக்கு பன்றி காய்ச்சல் இருந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அய்யாவு, சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான கோரப்பள்ளம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தகவல் அறிந்த கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா மற்றும் சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நோய் மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அய்யாவு வீடு இருந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அய்யாவு குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி கண்காணிப்பில் உள்ளனர்.

பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story