மினிவேன் டயர் வெடித்து பெண் பலி


மினிவேன் டயர் வெடித்து பெண் பலி
x

மினிவேன் டயர் வெடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி சலுப்பனோடை கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்காயி (வயது60), முத்துராஜா (55), தாழிக்குளம் ராக்காயி (60), ஆவரங்காடு கலையரசி (40). இவர்கள் நேற்று மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி மினிவேனில் மானாமதுரை சந்தைக்கு விற்பனைக்கு மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர். மினிவேனை இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த சங்கையா (42) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வெள்ளிக்குறிச்சி விலக்கு அருகே வரும்போது வேன் டயர் வெடித்து கவிழ்ந்தது. இதில் மூக்காயி, ராக்காயி, கலையரசி, முத்துராஜா படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மூக்காயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story