ராயக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராயக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் உள்ள அண்ணா சிலை அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசு, பொருளாளர் சீனிவாசலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாயமான பாஞ்சலி நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனை மீட்க போலீசார் அலட்சியம் காட்டுவதை கண்டித்தும், மாணவனை உடனே மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது 2 நாட்களில் மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர்கள் நவநீதகிருஷ்ணன், சந்துரு, முன்னாள் ஒன்றிய தலைவர் பிரவீன்தர்ஷன்குமார், தமிழ் வளர்ச்சி ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாணவனின் பெற்றோர், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.