டாஸ்மாக் கடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே டாஸ்மாக் கடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
புதுக்கடை,
புதுக்கடை அருகே காப்பிக்காடு சந்திப்பில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்து அத்திகுழி என்னும் இடத்தில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதற்கு விளாத்திவிளை, அத்திகுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாத்திவிளை காமராஜர் படிப்பக நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் சார்பில் அத்திகுழியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. படிப்பக செயலாளர் டார்வின் ரோஜர் தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஜெபமோகன் டேவிட், விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story