தலைவாசல், எடப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலைவாசல், எடப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவாசல்,
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, அமலாக்கத்துறையை கண்டித்து தலைவாசல் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவாசல் தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அரங்க சங்கரய்யா தலைமை தாங்கினார்.
இதில் தலைவாசல் வடக்கு வட்டார தலைவர் உதயகுமார், தெற்கு வட்டார தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர்கள் தன்ராஜ், அழகுவேல், நேதாஜி ராமர், சேலம் கிழக்கு மாவட்ட மனித உரிமை ஆணைய தலைவர் ராஜேந்திரன், தலைவாசல் வட்டார துணைத்தலைவர் முருகேசன், நிர்வாகிகள் மணிமாறன், பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை கண்டித்தும், அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் எடப்பாடி நகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எடப்பாடி தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் கணபதிராம், நிர்வாகிகள் சுந்தரம், ஆனந்தன், ஆறுமுகம், சீனிவாசன், ராஜா, மோகன் குமார், ஆண்டியப்பகவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.