நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ஏழுமலை, சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஏழுமலை, மாநில செயலாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள சாலை பணியாளர்களை மாற்றுப்பணி உத்தரவு வழங்கிட வேண்டும்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்டர் விடுப்பு சம்பளங்களை வழங்கிட வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜெய்சங்கர், தேவேந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை, முருகன், முத்து, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பலராமன் நன்றி கூறினார்.


Next Story