1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை விளாம்பட்டி புதூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் கரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் மேற்படி வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 7 பேரல்களில் 1,400 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story