அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மேகநாதன் சிறப்புரையாற்றினார். சிவக்குமார், கேசவலு, சகாதேவன், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவையை 1.1.2022 முதல் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணச்சலுகையை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.