தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிர்பலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராகவன், தொப்பம்பட்டி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் பிள்ளையார் கோவில் இடம் உள்ளது. இந்த இடத்தினை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாபுத்தூர்

சேறும், சகதியுமான சாலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோவில் பிரகாஷ் நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி காணப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பிரகாஷ்நகர்

தடுப்புச்சுவர் இன்றி காணப்படும் பாலம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் மேலவெள்ளூர் பகுதியில் சாலையின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்துவிட்டதால் தற்போது தடுப்புச்சுவர் இன்றி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஞானசேகர், வெள்ளூர்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

திருச்சி-கரூர் சாலையில் ஜீயபுரம் பகுதியில் தினந்தோறும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு டீக்கடைகளின் முன்னால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் நடைபாதை அமைத்தும் பொதுமக்களுக்கு எந்த பயனுமில்லாமல் இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜீயபுரம்


Next Story