தோட்டக்கலை பண்ைணயில் இயக்குனர் ஆய்வு


தோட்டக்கலை பண்ைணயில் இயக்குனர் ஆய்வு
x

முருகாப்பாடி கிராமத்தில் தோட்டக்கலை பண்ணையை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அடுத்த முருகாப்பாடி கிராமத்தில் உள்ள போளுர் வட்டார தோட்டக்கலை பண்ணையை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் திண்டிவனம் கிராமத்தில் தரிசு நில தொகுப்பை பார்வையிட்டார். அங்கு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் விவசாயிகளிடம், தரிசு நில தொகுப்பில் புதிதாக உருவாக்கி உள்ள நீர் ஆதாரத்தை பயன்படுத்தி நீண்டகாலம் பயன் தரும் பழ செடிகளான மா, கொய்யா மற்றும் எலுமிச்சை போன்றவற்றை நடவு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

விவசாயிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், ேதாட்டக்கலை அதிகாரிகள் உடன் இருந்தனர்.Next Story