கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாலுகா அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாலுகா அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், தாசில்தாரின் கார் டிரைவராகவும் பணியாற்றியவர் நவநீதன் (வயது 50). இவர் சீமானுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலரின் மனைவி செல்போனில் பேசியுள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலரை வெட்டி கொலை செய்து விடுவதாக நவநீதன் பேசி இருக்கிறார். இது பற்றிய செல்போன் உரையாடல் ஆடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சங்கரலிங்கத்திடம் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் மதுரை கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவின் பேரிலும், உசிலம்பட்டி கோட்டாட்சியர் சங்கரலிங்கம் ஆணைப்படி, அலுவலர் நவநீதனை பணியிடை நீக்கம் செய்து உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா உத்தரவிட்டுள்ளார்.