பா.ஜனதா கட்சியினர் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம்


பா.ஜனதா கட்சியினர் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பா.ஜனதா அரசு சார்பில் பட்டியலின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பட்டியலின மக்களின் வீடுதேடி சென்று திட்டங்கள் குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலின மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.

நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர்கள் சொக்கலிங்கம், அசோக் குமார், மண்டல துணைத் தலைவர் லட்சுமணன், மண்டலச் செயலாளர் ராஜன், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைத் தலைவர் செல்லப்பா, மண்டல தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவாஜி என்ற பழனிச்சாமி, தங்க மாரியப்பன், பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்கனி, கணினி தரவுப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா, மகளிர் அணி மண்டல தலைவி அனுசுயா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவ்வை துரை, கிளைத்தலைவர்கள் ராமசுப்பு, கார்த்திசன், பால்ராஜ், சுரேஷ், குமார், சங்கர், ஆதிலிங்கராஜா, வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story