கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அடுத்த கழுதூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் துரைராஜ், பாண்டுரங்கன், ராஜேஷ், கணேஷ்குமார், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆகவே மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கிராமம்தோறும் சென்று பொதுமக்களிடம் தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்து கூறி புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க பாடுபடவேண்டும். தி.மு.க.வில் உண்மையாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் பேராசிரியர்கள் ஜெயரஞ்ஜன், மதிமாறன், இமயம், பேரூராட்சி செயலாளர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், அமிர்தலிங்கம், சின்னசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், நிர்வாகிகள் சின்னசாமி, செம்பியான், திருவள்ளுவன், சின்னதுரை, ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.