கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தியாகதுருகம்,
தியாகதுருகத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தியாகதுருகம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் நூர்முகமது வரவேற்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகிற 30-ந்தேதி வரும் மாநில இளைஞரணி தி.மு.க. செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தியாகதுருகம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்திட வேண்டும். 2-வது முறையாக தி.மு.க. தலைவராக பதவியேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க. நிர்வாகிகள் எத்திராசு, நெடுஞ்செழியன், கலியன், மடம் பெருமாள், சுப்பு இளங்கோவன், கணேசன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் நன்றி கூறினார்.