தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x

கீழ்பென்னாத்தூரில் தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் நகர தி.மு.க. சார்பில் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட இலக்கிய அணி தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் சரவணன், நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் குமார்‌, ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்பு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சுந்தரமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் சீத்தாராமன், ஒன்றிய பிரதிநிதி அருள்மணி மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.


Next Story