தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x

சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வடமாதிமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் கோவிந்தன், விஜயலட்சுமி அரங்கநாதன், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் அ.எழில்மாறன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு செயல்வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துகூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிபெற பாடுபட வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாண்டுரங்கன், எதிரொலிமணியன், சேத்துப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், துணைத்தலைவர் முருகையன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story