செஞ்சி நகரதி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


செஞ்சி நகரதி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)

செஞ்சி நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர அவை தலைவர் பார்சுதுரை தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர துணை செயலாளர்கள் செயல்மணி, சங்கர், லதா கார்த்திக், பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதிகள் சர்தார், காளி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் காஜா நஜீர் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி, அரசு வக்கீல் தமிழ்செல்வி கர்ணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு தீவிர பணியாற்றுவது, நகர அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் அன்புசெல்வன் நன்றி கூறினார்.


Next Story