தி.மு.க. செயற்குழு கூட்டம்
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
தட்டாா்மடம்:
சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் முதலூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி அன்னகணேசன், ஒன்றிய துணை செயலர் யோகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலர் பொன்முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஒன்றியத்தில் கொடி கம்பம் இல்லாத இடங்களில் தி.மு.க. கொடியேற்றுவது, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், மாநில திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் இளைஞரணி கூட்டம் தூத்துக்குடியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் மத்திய ஒன்றியத்தில் இருந்து திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் மீனா, ரெத்தினபால், அந்தோணிராஜ், பரமசிவன், ஜெயபாண்டியன், விஜயராஜ், முத்துமணி, ஜெயராஜ், சுடலைமணி, தங்கமணி, அப்துல்பரிது, ராஜ்குமார், ராஜ், அண்ணாத்துரை, சுதாகர், ஜெயசிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.