தாரமங்கலம் நகரசபை கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு


தாரமங்கலம் நகரசபை கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு
x

தாரமங்கலம் நகரசபை கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தனர்.

சேலம்

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகரசபை கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. நகரசபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய 23-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம், தன்னுடைய வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்தார். உடனே வேதாச்சலம் கூட்டத்தில் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளியே சென்றார்.

தொடர்ந்து துணைத்தலைவர் தனம், உறுப்பினர்கள் மைசூர், முருகன், சின்னுசாமி, ருக்குமணி ஆகியோர் தங்களது வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி தலைவர், ஆணயைாளரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர், இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுகளுக்கும் தேவயைான பணிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story