திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை


திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை
x

திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஜெ.ஜெ நகரைச் சேர்ந்தவர் திமுக பிரமுகரான மோகன்.

மோகன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகின. ரத்த காயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மோகன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story