தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

நெல்லையில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் 100 தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் தெருமுனை பிரசார கூட்டம் தச்சநல்லூர் காந்தி சிலை அருகே நடைபெற்றது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், "கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவர் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி உள்ளார்.

தற்போது இந்தியாவே வியக்கும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நேரத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர வார்டு மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தி.மு.க அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி, 100 தெருமுனை பிரசார கூட்டம் நடத்துகிறோம். அதனை வெற்றிகரமாக நடத்த வேண்டும்" என்றார்.

கூட்டத்துக்கு தி.மு.க வர்த்தக அணி மாநில இணை செயலாளர் மாலை ராஜா முன்னிலை வைத்தார். மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story