டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி அறிவியல் குழும தொடக்க விழா


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்   சிவந்தி அறிவியல் குழும தொடக்க விழா
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி அறிவியல் குழும தொடக்க விழா

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு படிப்பறிவோடு தனித்திறமைகளை வளர்ப்பதற்காக சிவந்தி அறிவியல் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு துறை சார்ந்த படிப்புகளுக்கு தகுந்த கருத்து பட்டறைகள், போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்வியாண்டின் அறிவியல் குழும தொடக்க விழா நடந்தது.

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி கணித இணை பேராசிரியர் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கணிதத்தின் அவசியம், அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடு, எளிய முறையில் கணிதம் கற்கும் முைற ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். அப்போது அவர், மாணவர்கள் கல்வி பயிலும் போதே ஆராய்ச்சி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அறிவியல் குழும ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறை துணை பேராசிரியருமான பாலகுமார், கல்வி ஆண்டுக்கான திட்டப்பணி குறித்து எடுத்துரைத்தார். மேலும் மாணவ குழும உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் பேராசிரியர்கள் வாசுகி, ஜோதி ஸ்டெல்லா, ஜெயந்தி மற்றும் மாணவ உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story