பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்து 1000 வாழைகளை நாசமாக்கிய யானை கூட்டம்


பூதப்பாண்டி அருகே   தோட்டத்தில் புகுந்து 1000 வாழைகளை நாசமாக்கிய யானை கூட்டம்
x

பூதப்பாண்டி அருகே யானை கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து 1000 வாழை, தென்னைகளை நாசமாக்கியது. சேதமடைந்த பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே யானை கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து 1000 வாழை, தென்னைகளை நாசமாக்கியது. சேதமடைந்த பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை எழுந்துள்ளது.

யானை கூட்டம்

பூதப்பாண்டி அருேக உள்ள மலையடிவார பகுதிகளில் வன விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, வன விலங்குகளை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார்கோணம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வாழை மற்றும் தென்னை, இஞ்சி, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 1 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர் செய்துள்ளார். இந்த வாழைகள் குலை தள்ளும் தருவாயில் நின்றன. மேலும், அந்த தோட்டத்தில் இஞ்சி, தென்னை போன்றவையையும் பயிர் செய்துள்ளார்.

1000 வாழைகள் சேதம்

நேற்று முன்தினம் இரவு மலையில் இருந்து இறங்கி வந்த யானை கூட்டம் குட்டிகளுடன் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்தன. அவை சுமார் 1000 வாழைகளை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன. மேலும், அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து 18 தென்னை மரங்களை நாசப்படுத்தியது. அந்த கூட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக தெரிகிறது.

நேற்று காலையில் தோட்டத்திற்கு வந்த மணிகண்டன் வாழை, தென்னைகள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான மக்கள் அங்கு கூடி சேதமடைந்த வாழை தோட்டத்தை பார்வையிட்டனர்.

நிவாரணம் வழங்க கோரிக்ைக

இதுகுறித்து மணிகண்டன் சம்பந்தப்பட்ட வன அலுவலரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, கடந்த ஆண்டு 2 முறை யானைகள் தோட்டத்தில் புகுந்து வாழை, தென்னையை சேதப்படுத்தியது. அதற்கான நிவாரண தொகை இன்னும் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் யானைகள் வாழைகளை சேதப்படுத்தியுள்ளதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுேபான்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் வன விலங்குகள் விளை நிலங்களில் புகாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு தகுந்த நிவாரண உதவி உடனடியாக வழங்க வேண்டும், என்றார்.

இதற்கிடைேய யானை கூட்டம் அந்த பகுதியிலேயே சுற்றி வருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே, யானைகளை வனப்பகுதியில் விரட்டியடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story